ஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம்.
முடி உதிரக் காரணம் என்னவாக இருக்கும் பார்ப்போமா ?
இரத்த சோகை,சரியாக உணவு உட்கொள்ளாதிருத்தல்,ஊட்டச்சத்து குறைபாடு,ஹேர் கலரிங்,ஷாம்பூ மாற்றி மாற்றி உபயோகித்தல்,தலைக்கு எண்ணெய் தடவாமலிருப்பது,தைராய்டு,புரோட்டீன் குறைபாடு,மெனோபாஸ்,குறிப்பிட்ட மருந்து வகைகள்,சுற்றுப்புற சூழல்,இன்னும் பல காரணங்கள் உள்ளன.
முடி உதிர்வதற்க்கான தீர்வுகள்;
கற்றாழை
கற்றாழை முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு , தேவையான ஊட்டச்சத்தையும் முடிக்கு அளிக்கிறது.கற்றாழையில் உள்ள என்சைமேஸ் மற்றும் ஆல்கலின் முடி வளர ஊக்கமளிக்கிறது.
*கற்றாழையின் சாறு மற்றும்ஜெல் இரண்டுமே தலைக்கு குளிர்ச்சியை தருகிறது.பொடுகு,தலையில் கட்டி,புண்,எரிச்சல்,போன்றவற்றை நீக்கி முடிக்கு ஊட்டமளித்து முடிவளரச்செய்கிறது.
*கற்றாழை சாற்றை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து,சில மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.இவ்வாறு வாரம் மூன்று முறை குளித்தால் முடி உதிர்வது குறையும்.
*நன்றாக முடி வளர கற்றாழை சாற்றை ஒரு தேக்கரண்டி அளவு வாரவாரம் உட்கொண்டால் முடி நீளமாக வளரும்.
வெங்காயம்
வெங்காயத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தலையில் உள்ள கிருமி மற்றும் ஒட்டுண்ணிகளை அழித்து முடி உதிர்வதை தடுக்கிறது.
*வெங்காய சாற்றை தலையில் நேரடியாக தடவி 30 நிமிடம் கழித்து முடியை கழுவி பின் ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும்.
*3 மேஜைகரண்டி கற்றாழை சாருடன்,2 மேஜைகரண்டி வெங்காய சாறு மற்றும் 1 மேஜைக்கரண்டி ஆலிவ் ஆயில் சேர்த்த கலவையை தலையில் தடவி 30 நிமிடம் கழித்து ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும்.
*வாரம் மூன்று முறை இவ்வாறு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நெல்லிக்காய்
தினமும் நெல்லிக்காய் எடுத்து கொண்டால் முடி அடர்த்தியாவதுடன் முடி உதிர்வை தடுத்து மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது.இது மயிர் உடைவதை தடுக்கிறது.
*மேலும் நெல்லிக்காயில் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் வைட்டமின் c உள்ளது.இது முடி வளர செய்வதுடன்,இயற்கையான கலரையும் தருகிறது.
*2 ஸ்பூன் நெல்லி சாறுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் வைட்டமின் A,B,C,கால்சியம்,பொட்டாசியம்,இரும்பு சத்து,மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக உள்ளது.இது முடி வளர செய்வதுடன்,முடி வறண்டு போவதை தடுத்து,நிறம் மாறுவதை தடுக்கிறது.
*ஒரு தேக்கரண்டி தேனுடன்,ஒன்றரை கப் உருளைக்கிழங்கு சாறு மற்றும் சிறிதளவு நீருடன்,ஒரு முட்டைக்கரு கலந்து முடியில் தடவி 30 நிமிடம் கழித்து ஷாம்பூ போட்டு குளிக்கலாம்.
வெந்தயம்
*வெந்தயம் முடி உதிர்வதற்கான ஒரு சிறந்த மருந்து.
*இது முடி வளரச்செய்வதுடன்,உதிர்ந்த மயிர்க்கால்களில் மீண்டும் முடி வளர உதவுகிறது.
*இதில் உள்ள நிக்கோட்டின் மற்றும் புரோட்டீன் முடிக்கு ஊட்டமளிக்கிறது.
*ஒரு கப் வெந்தயத்தை இரவே ஊற வைத்துவிட வேண்டும்,காலையில் அதை அரைத்து அந்த கலவையை,தலையில் தடவி,ஒரு துணியால் தலை முடியை முழுவதுமாக காற்று படாமல் மூடி வைக்க வேண்டும்.
*40 நிமிடம் கழித்து முடியை கழுவ வேண்டும்.இவ்வாறு ஒரு மாதம் தினமும் காலையில் தொடர்ந்து செய்ய வேண்டும்.
பூண்டு
*நாம் அனைவரும் அறிந்த மிகவும் எளிதில் கிடைக்க கூடிய ஒரு மருந்து பூண்டு.இதன் மகத்துவம் ஏராளம்.
*பூண்டு முடி உதிர்வதை தடுப்பதோடு,முடி வளரவும் உதவி புரிகிறது.பொடுகுக்கு ஒரு சிறந்த மருந்து பூண்டு.
*இதில் உள்ள அல்லிசின் முடி உதிர்வைக் குறைக்கிறது.வைட்டமின் E முடிக்கு ஊட்டமளித்து,மண்டையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உதிர்ந்த மயிர்க்கால்களிலிருந்து மயிர் புதியதாய் வளர உதவி புரிகிறது.
*ஆலிவ் எண்ணெயுடன்,8 நசுக்கிய பூண்டு பல்லை சேர்த்து கொதிக்க வைத்து மயிர்க்கால்களில் தடவ வேண்டும் .இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை செய்து பாருங்கள்,நல்ல பலன் கிடைக்கும்.
ஆயில் மசாஜ்
பாதாம் எண்ணெய்,ஆலிவ் எண்ணெய்,ஆமணக்கு எண்ணெய்,தேங்காய் எண்ணெய்,இவற்றில் ஏதாவதொரு எண்ணையை தலை முழுவதும் தடவி,நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.வைட்டமின் E ஆயில் பயன்படுத்தினால் மிகவும் நல்லது.இவ்வாறு வாரம் இரண்டு முறையாவது செய்ய வேண்டும்.