இன்றைய தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள்
1. மக்களை விலைக்கு வாங்கும் அராஜக ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி :கருணாநிதி
மக்களை விலைக்கு வாங்கும் அராஜக ஆட்சி நடத்துகிறார் ஜெயலலிதா. அரசின் லஞ்ச லாவண்யங்களுக்கு அதிகாரிகளும் துணை போகிறார்கள். தேர்தல் முறைகேடுகளுக்கு அதிகாரிகள் துணை போகிறார்கள். ஜெயலலிதா இதுவரை அடித்த கொள்ளைகளும், சந்தித்த வழக்குகளும் போதாதா . தேர்தலில் போட்டியிடும தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
2. சாதி மோதலை தூண்டுகிறது திமுக : வைகோ போட்டியிடவில்லை
கோவில்பட்டியில் தன்னை மையப்படுத்தி சாதி மோதல் உருவாவதை தடுக்கவே தேர்தலில் போட்டியிடும் முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாக வைகோ அறிவிப்பு.
3.நான் தான் முதல்வர் : விஜயகாந்த் அடாலடி
தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தல் என்று கூறுகின்றனர். இதில் தர்மம் என்பது நாங்கள்தான். தமிழகத்தில் தி.மு.க.,- அ.தி.மு.க., இருவரும் மாறி மாறி ஏன் கொள்ளை அடிக்க வேண்டும். புதிய கட்சி ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது. மக்கள் நினைப்பதை நான் செய்துமுடிப்பேன். நீங்கள்தான் என்னை முதல்வர் என்று சொல்கிறீர்கள். முதல்வராக வருவாரா, வரமாட்டாரா என்று சந்தேகப்படுகிறார்கள். நிச்சயம் முதல்வராக வருவேன்.