Top Ad unit 728 × 90

புதிது

recent

அரசியல் இறுதிசுற்று விமர்சனம்


வணக்கம், நெடு நாட்களுக்கு பின் பதிவுலகம் திரும்பிய் உள்ளேன்.
மாதவன், ரித்திகா நடிப்பில் ஹிட் அடித்த இறுதிசுற்று திரைப்பட விமர்சனம் அல்ல இது.


வரப்போகும் தேர்தலில் யார் யாருடன் சேர்வது என்பது குறித்து ஒரு இறுதிசுற்று நடக்கிறதே அது தொடர்பானது தான் இப்பதிவு.

தேர்தலில் கூட்டணி ஏன்?

பொதுவாகவே ஒரு கட்சி என்பது ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு, அதற்கென கொள்கைகள் இருக்கும். ( இருக்கணும், இல்லைனாலும் இருக்கற மாதிரியாவது காட்டிக்கணும் ). ஆனால் தேர்தலை சந்திக்கும் போது, தனித்து அந்த கட்சிகள் தங்களுக்கான வெற்றி வாய்ப்பு குறைவு என கருதும் போது, ஒத்த கருத்தியல் அமைப்புடன் கூடிய ( அதே கொள்கை மாதிரி தான், இதெல்லாம் ஒரு டேம்ப்ளேட், எல்லா கட்சிக்கும் பொதுவான கொள்கை கண்டிப்பாக இருக்கும், உங்களுக்கும் எனக்கும் ஒரே மாதிரி முகம் இல்லை, அனால் இருவருக்குமே முகம் என்ற ஒன்று உண்டு தானே, அது தான் பொது.) கட்சிகள் ஒன்றாக சேர்ந்து தேர்தலை சந்திக்கும். பெரும்பாலும் இதில் இரண்டு வகை உண்டு, ஒப்பந்தம் செய்து கூட்டணி அமைப்பது, அல்லது தேர்தல் முகாம் மட்டுமே நடத்துவது. பெரும்பாலும் நம் நாட்டில் முகாம் மட்டும் தான், சிறிய கட்சிகள் பெட்டி கட்டி கொள்கின்றன. ஆட்சியில் பங்கெல்லாம் அவ்வளவாக நடப்பதில்லை.

தமிழக நடப்பு நிலவரம்

ஆட்சியில் பங்கும், 60 தொகுதிகளும் வேண்டும் என்ற தேமுதிகவின் நிபந்தனையால் கூட்டணி அமைக்க முடியாமல் திமுக தவித்து வருகிறது.
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத அளவுக்கு திமுக தோல்வி அடைந்தது. 2011 உள்ளாட்சித் தேர்தலிலும், இடைத்தேர்தல்களிலும் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
2014 மக்களவைத் தேர்தலில் ஓர் இடத்தில் கூட திமுக கூட்டணியால் வெற்றி பெற முடியவில்லை. இப்படி தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் திமுகவுக்கு இந்த பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை வெளியேறிய நிலையில் தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து அதிமுகவை தோற் கடிக்க வலுவான கூட்டணியை அமைக்க திமுக திட்டமிட்டது.
கடந்த 13-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவித்தார். காங்கிரஸ் உடனான கூட்டணியை எளிதாக உறுதிப்படுத்திய திமுக வால் என்னதான் முயன்றாலும் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர முடியவில்லை.
கூட்டணி தொடர்பாக கடந்த 6 மாதங்களாகவே தேமுதிகவிடம் திமுக பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என கருணாநிதி பகிரங்க அழைப்பு விடுத்தார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர், விஜயகாந்த் குடும்பத்தினருடன் கூட்டணி தொடர்பாக தொடர்ந்து பேசி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனை இரு கட்சிகளும் மறுக்கவில்லை.
ஒரு பக்கம் திமுகவுடன் பேசிக் கொண்டே, மறுபக்கம் பாஜக, மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் விஜயகாந்த் வெளிப்படையாக பேச்சு நடத்தி வருவது திமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப் பாளருமான பிரகாஷ் ஜவடேகர் நேற்று விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள் ளார். விஜயகாந்த் உடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது என ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்தை மட்டுமல்ல, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸையும் அவர் சந்தித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ''திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இணையும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆனால், 70 தொகுதிகளிலும், ஆட்சியில் பங்கும் வேண்டும் என்ற விஜயகாந்தின் நிபந்தனை தான் கூட்டணிக்கு தடையாக உள்ளது. இப்போது 60 தொகுதிக்கு இறங்கி வந்துள்ள தேமுதிக, ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறது. திமுக அணிக்கு வராவிட்டால் தேமுதிக ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. எனவே, வெற்றி பெற வேண்டும் என நினைத்தால் அவர்கள் இங்குதான் வந்தாக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்'' என்றார்.
காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ''அதிமுக வுடன் கூட்டணி அமைத்து எதிர்க் கட்சித் தலைவரான விஜயகாந்த், இப்போது ஆட்சியில் பங்கு வேண்டும் என விரும்புகிறார். ஆட்சி, அதிகாரம் வேண்டும் என்று ஆசைப்படும் ஒருவர் கண்டிப்பாக வெற்றி பெற முடியாத கூட்டணிக்கு செல்ல மாட்டார். தனது பேரம் பேசும் வலிமையை அதிகரிக்கவும், திமுகவுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தவும் பாஜகவுடன் பேச்சு நடத்தி வருகிறார். இதனால் தேமுதிக பாஜக கூட்டணிக்கு செல் லும் என கூற முடியாது. பிரகாஷ் ஜவடேகர் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்ற விஜயகாந்தின் கருத்து இதனை உறுதிப்படுத்துகிறது'' என்றார்.
ஆட்சியில் பங்கு, குறைந்தது 60 தொகுதிகள் என்ற தேமுதிகவின் நிபந்தனையால் கூட்டணி அமைக்க முடியாமல் தவித்து வருகிறது திமுக. தேமுதிக இல்லாமல் தேர்தலை சந்திப்பது குறித்து திமுக முக்கியத் தலைவர்கள் ஆலோசித்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




அரசியல் இறுதிசுற்று விமர்சனம் Reviewed by Manohar Veera on பிற்பகல் 8:17:00 Rating: 5

கருத்துகள் இல்லை:

");
All Rights Reserved by !¡...என் செய்வேன்...¡! © 2014 - 2015
Powered By Blogger, Designed by Sweetheme

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இயக்குவது Blogger.